Thursday, April 16, 2020

Kumpamela India is grand biggest festival once in 12 year


கும்பமேளா
       கும்பமேளா இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும். குறிஞ்சிப் பூ பூப்பதை போல யுனெஸ்கோவின் பாரம்பரிய திருவிழா பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது இத்திருவிழா இந்தியா முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களும் ஒன்று சேர்ந்து நடத்தக்கூடிய திருவிழாவாக கும்பமேளா விளங்குகிறது

வெளிநாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதால் இது சிறப்புமிக்கது.

கும்பமேளா புராணக்கதை:
          கும்பமேளா என்ன கும்பமேளா என அழைப்பதன் காரணம் புராணகதை மூலம் பார்ப்போம்.
   மரணத்தை வெல்லும்  தேவாமிர்தம் பாற்கடலுக்குள் இருப்பதை அறிந்த தேவர்கள் தங்களிடம் இருக்கும் படை பலத்தை வைத்து எடுக்க முடியாது. எனவே அரக்கர்களின் உதவியை நாடுகின்றனர் அப்படிப்பட்ட தேவாமிர்தம் கிடைத்துவிட்டால் அதைத் தே
வர்களிடமிருந்து தட்டிப் பறித்துக் கொள்ளலாம் என்று நினைத்து உதவிக்கு வர சம்மதிக்கிறார்கள் அரக்கர்கள்

     மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய தொடங்கினார்கள் நேரம் ஆக ஆக வாசுகி என்ற பாம்பின் வாயிலிருந்து நஞ்சு வெளிவர தொடங்கியது நஞ்சு கடலில் கலந்தால் அமிர்தம்  முழுவதும் விஷமாக மாறிவிடும் இதை உணர்ந்த ஈசன் பருக அதைக் கழுத்துக்கு கீழே செல்ல விடாமல் தடுக்கிறாள் ஈஸ்வரி.

       இறுதியாக பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிவரத் தொடங்கியது கும்பம் என்னும் கலசத்தில்  சேகரித்தனர்.இதை முழுமையாக கைப்பற்ற நினைத்த அசுரர்கள் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மிகப் பெரும் போர் ஏற்பட்டது இறுதியாக தேவர்கள் வென்று அமிர்த கலசம் கிடைத்தது
அதை தேவலோகத்துக்கு எடுத்து வரும்போது அதில் இருந்து சில துளிகள் பூமியில் நான்கு இடங்களில் விழுந்தது அவைதான் கும்பமேளா என்றழைக்கப்படுகிறது. இடங்களான அலகாபாத், உஜ்ஜயினி, நாசிக், ஹரித்துவார்,புண்ணிய ஆறுகளில் தேவாமிர்தம் தெறித்து விழுந்த கலந்த தினமே கும்பமேளா விழாவாக கொண்டாடப்படுகிறது.

கும்பமேளாவின் சிறப்பு:
  குறிஞ்சி மலர் பூப்பதும் கும்பமேளா கொண்டாடப்படுவது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்றாலும் குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் மேலும் சிறப்பு மிக்க கும்பமேளா வருவதுண்டு தேவாமிர்தம் சிந்திய நான்கு இடங்களிலும் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் சாதாரண கும்பமேளா

ஆறு ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஹரித்துவார் அலகாபாத் ஆகிய இடங்களில் கொண்டாடப்படுவது அர்த்த கும்பமேளா அர்த்தம் என்றால் பாதி என்று அர்த்தம்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுமையான அதாவது பூரண கும்பமேளா கொண்டாடப்படுகிறது இது 4 இடங்களில் நடைபெறும்.பூர்ண கும்பமேளா இது இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்கள் ஒன்றுகூடிய கொண்டாடப்படும் திருவிழா கருதப்படுகிறது. மேலும் யுனெஸ்கோ இந்தியாவின் பாரம்பரிய கும்பமேளா திருவிழா அங்கீகரிக்கப்படுகிறது
இத்திருவிழாவை இந்தியாவை 50 நாட்களுக்கு நடைபெறும் பொதுவாக விரதம் மேற்கொள்ளுதல், சுவாமி தரிசனம் செய்தல், தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் மட்டுமின்றி புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடுவதும் இந்துக்கள் மதத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நீர்நிலைகளில் நீராடுவது ஏழேழு ஜென்மங்களுக்கும் புண்ணியத்தை தேடித்தரும் இந்தப் புனித நீர் நீராடலின் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் போக்கும் என்பது புராணங்களின் செய்தி கும்பமேளா மகாமகம், புஷ்கரம் போன்றவை விமர்சையாக புனித நீராடல் கொண்டாட்டங்கள். உலக அளவில் அதிக இந்துக்கள் ஒரே இடத்தில் கூடும் திருவிழா கும்பமேளா.

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾




        

No comments:

Post a Comment